12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!

Default Image

வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இங்கிருந்து பெரியார் பிரதான கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். வைகை அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக ஜூன் மாத முதல் போக சாகுபடிக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் வைகை அணையை திறந்து வைத்தனர்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 14 வருடங்களுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையிலிருந்தும், 12 வருடங்களுக்கு பிறகு வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியின் மிக பெரிய வெற்றி என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்