வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் தகவல்…!!!
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார் அமைச்சர் உதய குமார். இது குறித்து அவரை பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் வெள்ள பாதிக்கும் பாகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 119 அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.