வடகிழக்கு பருவமழை : தலைமை செயலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து, முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை, உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.