வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் ஆரம்பம்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் ஆரம்பமானது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் வைத்து, தமிழ்நாடு பேரிடர் தணிப்பு முகாமையும், ஆசிய பேரிடர் தடுப்பு ஆயத்த மையமும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் வருவாய் ஆணையர் சத்திய கோபால் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.