வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் -வைகோ
வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அரசியல் கட்சியினர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை.வெற்றிடத்தை காற்று நிரப்பி கொண்டே இருக்கும். கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.