வாச்சாத்தி வழக்கு : 30 ஆண்டுகால நீதி போராட்டம் வெற்றி.! CPI(M) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு.! 

CPM State Secretary K Balakirshnan

1992 ஜூன் 20ம் தேதி தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த 2011ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், அப்போது உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என  தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மேலுமுறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு , தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று கோவையில் கட்சி அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறுகையில், இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தந்ததில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினருமான பி.சண்முகம், CPIM மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான டெல்லி பாபு , தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட்தோழர்கள் , தமிழகம் முழுவதும் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கு நன்றி.

30 ஆண்டுகால நீதிபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு பாராட்டுக்கள்,  வாழ்த்துக்கள்.  இந்த தீர்ப்பை அளித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  செய்தியாளர்கள் சந்திப்பில் வாச்சாத்தி தீர்ப்பை குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்