Supreme court of India - Vachathi Case [File Image]
தமிழகத்தையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் கடந்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் , தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது 18 பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது .
இந்த புகாரின் பெயரில் 269 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பல வருடங்களாக நடந்து வந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் வரை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
வாச்சாத்தி சம்பவம்… விடுதலை படத்தை நினைவூட்டும் கொடூரங்கள்.! வழக்கறிஞர் இளங்கோ பரபரப்பு பேட்டி.!
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் தீர்ப்பை உறுதி செய்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் தான் உயிருடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது . அவர்களுக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தும் , பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு தொகை அளிக்கவும், அதில் 5 லட்சத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதில் தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் வனத்துறை அதிகாரி நாதன், பாலாஜி உட்பட 17 பேர் மட்டும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் 6 வார காலத்திற்க்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…