#BREAKING: தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும்- மா.சுப்பிரமணியன்..!

தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி பாடுத்திருக்கிறார்கள்.
நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்த தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது. 25 லட்சம் தடுப்பூசியில் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன என தெரிவித்தார்.