கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்த பள்ளிகளுக்கு சீல் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்!

Published by
Rebekal

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் 13 கோடி செலவில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருந்த வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 44% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி வருகின்ற செப்டம்பர் 12 இல் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிக்காக கூடுதலாக 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கோரி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

4 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

4 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

5 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

7 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

7 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

7 hours ago