தடுப்பூசி உற்பத்தி.., முதலமைச்சர் ஆய்வு..!
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள HLL பயோடெக் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
ரூபாய் 600 கோடி செலவில் தொடங்கப்பட்ட மையம் 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. செங்கல்பட்டில் மீண்டும் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது பற்றி அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.