‘வாக்சின் போடுங்க மக்கா’ – கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்…!

வரும் 12-ஆம் தேதி சென்னை முழுவதும் 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி நடைபெறவுள்ள நிலையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 12-ஆம் தேதி சென்னை முழுவதும் 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னை முழுவதும் ‘வாக்சின் போடுங்க மக்கா’ என்ற பாடலை ஒலிக்க செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ‘சுத்தமான சென்னை’ என்ற பாடல் மூலம் குப்பைகளை பிரித்து குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025