தமிழகம் முழுவதும் 5,000 மையங்கள்.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும், பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
எனவே கொரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், கூட்டமாக இருக்கும் இடத்தில் கண்டிப்பாக சமூக இடைவேளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை போட்டுக்குள்ள வேண்டும் என முதல்வர், பிரதமர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை இணைநோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் அல்லது வேறு அடையாள அட்டை இருந்தால் போதும். இதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் இருக்கின்றது. எனவே மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என அரசு அறிவுறுத்துகின்றது.