டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விரைவில் டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அடையாறில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் , 78 லட்சத்திற்கும் அதிகமானோர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் 12-வது மெகா முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 77.33 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 42.01 சதவீதமாக உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பின்பற்றப்படும் என தெரிவித்தார்.