தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது,”ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது போக போகத்தான் தெரியும்.எனினும்,கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே தீர்வாக உள்ளது.ஏனெனில்,முழு ஊரடங்குக்கு முன்னால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.ஆனால்,ஊரடங்குக்கு பிறகு தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக,சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல்,78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட,மாநில சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தப்பட்டு,அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது.எனவே,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைப்பார்.அதில்,ஆட்டோ டிரைவர், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்”,என்று கூறினார்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…