“அடுத்த 2 வாரங்களுக்கு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

Default Image

மதுரை:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,முன்னதாக ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,மக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர். குறிப்பாக,ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர்.

இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும்,தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,மக்களும் அதிக அளவில் வருகை புரிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.அந்த வகையில்,இதுவரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் தொடங்க மத்திய அரசிடம்  நானும்,முதல்வரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.அதன்படி,கட்டுமானப்பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது,வீரம் நிறைந்த விவேகம் கொண்ட மதுரை மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்