கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாம் ஏற்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா? என சோதிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லுரிலேயே தடுப்புசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசின் சார்பில் 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அட்மிஷன் முடித்து கல்லூரிக்கு வரும்போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை சமர்பித்துவிட்டு வகுப்பறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லுரியில் வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.