இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடந்து தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது தான் தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் பலர் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதால் எதுவும் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் தடுப்பூசி போட மறுக்கின்றனர். எனவே, பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து அண்மையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தற்போது தனது தொண்டர்களுக்கு ஈமெயில் மூலமாக கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் அன்பை சொல்லுங்கள். இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் தயக்கமின்றி உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனவும், உங்களுக்கான செய்தியை வீடியோவில் பேசி உள்ளேன் அதை அனைவருக்கும் கொண்டு சென்று புரியாதவர்களுக்கு புரியவையுங்கள். செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது, புத்தெழுச்சியுடன் களம் காண்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…