சீர்மரபினர் நலப் பள்ளி மாணவர் விடுதியில் காலியாக உள்ள இடங்கள் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
அதன்படி, தற்போது தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மாணவர் விடுதியில் காலியாக உள்ள 3224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்க்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை.
2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது “பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக. பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென 48 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் ” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தற்போது தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மாணவர் விடுதியில் காலியாக உள்ள 3224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்க்க அனுமதி வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிட்டுள்ளது.