போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் மண்டலத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC) 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓட்டுநருக்கு 8ம் வகுப்பும், நடத்துநருக்கு 10ம் வகுப்பும் தேர்ச்ஜஹி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல், 160 செ.மீ உயரமும், குறைந்தபட்சம் 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.