ஆவினில் காலிப்பணியிடங்கள்! இனி TNPSC மூலம் நிரப்படும் – தமிழ்நாடு அரசு
ஆவினில் 322 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
ஆவினில் காலிப்பணியிடங்கள்:
ஆவினில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆவினில் மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தேர்வு மூலம்தற்போது நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யிடம் ஒப்படைப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கை, அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
TNPSC செயலாளருக்கு வேண்டுகோள்:
இந்த நிலையில், அவினில் மேலாளர், துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற 322 பணியிடங்களை முறையாக நிரப்புமாறு TNPSC செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பணியிடங்கள் இனிமேல் TNPSC மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்வு தேதி போன்ற விவரங்கள் TNPSC இணைய தளத்தில் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.