உழைக்கும் மக்களின் வலியை பேசும் ‘வாழை’ – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை : வாழை திரைப்படத்தினை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

வாழை படம் வெளியான நாளிலிருந்து இப்போது வரை நம்மளைக் கண்ணீரில் கரைய வைத்துக்கொண்டு, இருக்கிறது என்றே சொல்லலாம். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தைத் தழுவி ‘வாழை’ படத்தினை இயக்கி இருக்கிறார்.
இந்த படம் மக்களைத் தாண்டி பல எமோஷனலான படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கே தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக, சேது, பிதாமகன், அவன் இவன், போன்ற எமோஷனலான படங்களை இயக்கிய இயக்குனர் பாலவே வாழை படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தி, மாரி செல்வராஜுக்கு, முத்தம் கொடுத்து படம் எப்படி என்பதை தன்னுடைய எமோஷனல் மூலம் தெரியப்படுத்திருந்தார்.
அவரைப்போல, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், அரசியல் சேர்ந்த தலைவர்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், படத்தினை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரி செல்வராஜைப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது.” உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ” எனக்கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025