வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
உழவரை தேடி திட்டம் மூலம் விவசாயிகளிடத்தில் புதிய தொழில்நுட்பத்திற்கான ஆலோசனைகள் அவர்களது சொந்த கிராமத்திற்கே சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 – 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று பேரவையில் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறித்தும் அறிவித்து வருகிறார்.
இதில், விவசாயிகளிடத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் பொருட்டு பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சர் அறிவித்துள்ளார். அதில், உழவரை தேடி எனும் திட்டம் மூலம் விவசாயிகளை அவர்களது சொந்த கிராமத்திலேயே நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பம் ஆலோசனைகளை வழங்கிடும் வண்ணம் உழவரைத் தேடி வேளாண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரமயமாக்கும் நோக்கில் ரூ. 3 கோடி செலவீட்டில் உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். 300 கிராம இளைஞர்களுக்கு மண் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
வேளாண்துறை மூலம் ஆயிரம் மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 56 ஒழுங்குமுறை கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025