முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் விழா- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Default Image

மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பட்நாவிஸ்  ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். நாளை மாலை 6.40 மணியளவில், சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தற்போது இந்த அழைப்பை ஏற்று முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்