யூடிபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி.
யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். பின்னர்,இந்த வீடியோக்களானது, வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மதன் பிரபலமானார்.
இந்நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக அநாகரிகமான முறையில் பேசியதையடுத்து, இவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது, தனிப்படை போலீசாரால், ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்டடார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குமாறு பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவரது மனைவியான கிருத்திகா 8 மாத குழந்தையுடன் சிறையில் இருந்த நிலையில், கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…