மீசை விவகாரம்.! இபிஎஸ் புகைப்படம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி.!

Default Image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடப்பாடி பழனிச்சாமி கூறிய மீசை விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்தார். 

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தல் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, நீங்கள் மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் இதே போல் திறந்தவெளியில் பிரச்சாரம் செய்வீர்களா என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்கும் தொனியில் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய பிரச்சாரத்தில் ஒரு புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்து உள்ளார்.

இபிஎஸ்-இன் மீசை : அவர் பேசுகையில், இந்த மீசை தான் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது வாயை மூடிக்கொள்ள உதவியது. கொடநாடு எனும் பெயரை கேட்டாலே அச்சத்தின் காதுகளை மூடிக்கொள்ள உதவியது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொள்வதற்கு கயிறாக மாறிப்போனது. இரண்டு பெண்மணிகளின் காலணிகளுக்கு பாலிஷ் போடும் பிரஷ் ஆக மாறிப்போனது அந்த மீசை எனவே, எந்த பயனும் இல்லாத மீசையை தான் மக்கள் மறந்து போனார்கள் என கடுமையாக தனது விமர்சனத்தை முன் வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

புகைப்படம் : மேலும் கூறிக்கொண்டு, ஒருவர் மீசை வைத்து ஆம்பளையா என்று கேட்டுள்ளாரே என்று கூறி ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினார். அதில், சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்திருப்பது போல இருக்கிறது. இவர்தான் மீசை வைத்து ஆம்பளையா என்று கேட்டு விமர்சித்துள்ளார். அடுத்து, தேர்தல் முடிந்த பிறகு இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் மோதிக்கொண்டார்கள் தங்கள் கட்சி சண்டைக்காக தற்போது மோடியுடன் நிற்கிறார்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

300 கோடி ரூபாய் : அடுத்ததாக, பெரியாரின் பேரனுக்கு கலைஞரின் பேரன் நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். கலைஞரின் பேரனாக கேட்கிறேன் கை சின்னத்தில் வாக்களியுங்கள். நமது முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். என கூறினார். மேலும், பிரதமர் மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்