நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்…!வைகோ பாராட்டு
கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றுகின்றனர்.நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.போராட்டம் நடத்துவதற்கு மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடவில்லை .மாநில அரசு கேட்ட நிவாரண நிதியில், 5 சதவிகிதத்திற்கு மேல் மத்திய அரசு கொடுக்காது.நாட்டிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகள், தமிழக அதிகாரிகள் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.