வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று உதைத்ததில் கீழே விழுந்து உஷா உயிரிழந்தார்.
உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்நிலையில் உஷாவின் உடற்கூறாய்வு முடிவுகளை, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அனிதா, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் உயிரிழந்த உஷா கர்ப்பமாக இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. கல்யாண் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…