உஷார்ர்..! ‘Pink Whatsapp’ மூலம் திருடப்படும் தகவல்கள்- காவல்துறை எச்சரிக்கை..!

Default Image

‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது.

மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப் படுவதாகவும்,மேலும்,எந்த காரணத்தினாலும் ‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்று கூறி வரும் லிங்குகளை தொட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிங்க் வாட்ஸ்-அப் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ வரும் லிங்குகளை க்ளிக் செய்யவோ,மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்றும்,அவ்வாறு செய்தால் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படும்” என்றும் கூறி எச்சரித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்