Seeman : என் மீது வீண் பழி! உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் – சீமான்
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயாலட்சுமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று விஜய லட்சுமியிடம் போலீசார் நடத்திய 8 மணி நேர விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பணப்பரிவர்த்தனை விவர விவரம் உள்ளிட்டவற்றை அவர் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சீமான் மீதான புகாரில் நடிகை விஜய் லட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கவே வீண் பழி சுமத்தப்படுகிறது.
குற்றசாட்டுகளை கண்டு நான் அஞ்சப்போவதில்லை, எங்கும் ஓடி ஒழியவில்லை. உண்மையான குற்றச்சாட்டாக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். உரிய விசாரணை நடத்தி என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும். பிரதமர் பதவியை இழந்தால், ஒட்டுமொத்த தேசத்திற்கும் தேர்தலா? ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தலா? கேள்வி எழுப்பிய சீமான் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், தேர்தல் செலவு குறையும் என்றார்.