தனிமை முகாமில் நாட்களை பயனுள்ளதாக கழிக்க புத்தகம்.. அசத்திய தூத்துக்குடி மாநகராட்சி!

Default Image

தூத்துக்குடியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களின் தனிமை நாட்களை பயனுள்ளதாக கழிக்க, அம்மாவட்ட மாநகராட்சி, அவர்களுக்கு புத்தகங்களை வழங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் காரணத்தினால், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமை முகாமில் தங்கவைக்கப்படுவர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகடிவ் என வந்தால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்புகின்றனர்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் நெகட்டிவ் என வந்தாலும் 7 நாட்கள் முகாமில் தங்கவைக்கப்படுவர். தனி அறையில் இருக்கும் காரணத்தினால் பலருக்கும் மனஉளைச்சல் ஏற்ப்டுகின்றது. இதன் காரணமாக, தூத்துக்குடியில் உள்ள தனிமை முகாமில் தங்கி இருக்கும் அனைவருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி புத்தகங்கள் வழங்கிவருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசினர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி என மூன்று கல்லூரி விடுதிகளில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சராசரியாக 150 முதல் 200 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளச்சலை போக்கவும், தனிமை நேரத்தைப் பயனுள்ளதாக கழிக்கவும் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதற்காக, காலச்சுவடு பதிப்பகத்திடம் இருந்து சிறுகதை, நாவல் போன்ற 100 புத்தகங்களை வாங்கி, தனிமை முகாமில் இருப்பவர்களுக்கு வழங்கி வருகின்றோம். இதனை படித்து அவர்கள் தங்களின் தனிமை நாட்களை செலவழித்து வருவதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்