ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை.
ஆறுமுகசாமி ஆணை அறிக்கை:
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை நடத்த பரிந்துரை:
குறிப்பாக வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
பெயரை பயன்படுத்த தடை:
இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
விஜயபாஸ்கர் வழக்கு:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு:
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயரை சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை.