உங்கள் வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது-கமலா ஹாரிஸ்க்கு ,மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் தன் கைப்பட வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
உலகமே எதிர்பார்த்திக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர்.ஆகவே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அனைத்து நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(55) அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் ஆவார்.ஏற்கனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் கமலா ஹாரிஸ் அவர்களின் குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர்.தற்போது அவர் வெற்றிபெற்றுள்ள நிலையில் துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தங்கள் வீடுகள் முன் பெண்கள் கோலங்களை போட்டும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் தன் கைப்பட வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் உங்களுக்கு வணக்கம்; வாழ்த்துகள்.அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.தங்களது வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் #KamalaHarris தமிழ்நாட்டின் மன்னார்குடி – துளசேந்திரபுரத்தை தாய்வழி பூர்வீகமாகக் கொண்டவர்!@KamalaHarris அவர்களின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்! pic.twitter.com/mP7ZHfcQ3Y
— M.K.Stalin (@mkstalin) November 9, 2020