திருச்சிக்கு ரூ.2000 கோடி., காஞ்சிபுரத்திற்கு ரூ.666 கோடி.! முதலீடுகளை அறிவித்த மு.க.ஸ்டாலின்.!

திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலும் , காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி ரூபாய் முதலீட்டிலும் புதிய ஆலைகள் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

MK Stalin USA Visit

சென்னை : தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது சிகாகோவில் உள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். இது குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ”  தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான ஜபில் (Jabil) நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் 5000 பேருக்கு வேலைவாப்புகள் கிடைக்கும் வண்ணம், திருச்சியில் ஓர் உற்பத்தி அலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதே போல, ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம், 365 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இளைஞர்களின் திறன் மற்றும் MSMEகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கு ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடனான உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், நமது ஒட்டுமொத்த தொழில்துறை அமைப்பை வலுப்படுத்தும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்