கள்ளக்குறிச்சி : விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டு அந்த விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசி ஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி அதிகாரி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தோர்க்கு இரங்கலையும் பல கட்சி தலைவர்கள் தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக அவசர முறையீட்டு மனு கொடுத்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை என்பவரும், கள்ளக்குறிச்சியை சார்ந்த நபர் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த அவசர முறையீடு செய்த நிலையில், அவர்கள் செய்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…