விஷச்சாராய விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவை – உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

chennai high court

கள்ளக்குறிச்சி : விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டு அந்த விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசி ஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி அதிகாரி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தோர்க்கு இரங்கலையும் பல கட்சி தலைவர்கள் தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக அவசர முறையீட்டு மனு கொடுத்துள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை என்பவரும், கள்ளக்குறிச்சியை சார்ந்த நபர் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த அவசர முறையீடு செய்த நிலையில், அவர்கள் செய்த  மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu