அக்டோபருக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூரை நகராட்சியாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2022 மே மாதத்திற்குள் முடிவடையும். சிப்காட் தொழிற்பேட்டைகளில் சிறு தொழில்களுக்கு 20 சதவிகிதம் இடம் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.