நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – நவ.1ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1ம் தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 29ம் தேதி காலை 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை அதிகாரி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள எதுவாக நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தவும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.