நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு – தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.