நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் பறக்கும் படையினரால் இத்தனை லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதா..? – மாநில தேர்தல் ஆணையம்
தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது, பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தீவிர முன்னேற்பாடு பணிகளில் அரசியல் காட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற, மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,650 பறக்கும் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட விவரம்
- கைப்பற்றப்பட்ட பணம் – ரூ. 40,40,831
- கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு – 15 லேப்டாப்கள், 40 மொபைல் போன்கள், 19 துண்டுகள், 140 பித்தளை குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருள்களின் மதிப்பு ரூ.12,57,080
- மதுபான பாட்டில்களின் மதிப்பு – ரூ. 74,090
- மொத்த மதிப்பு – ரூ. 53,72,001
என தெரிவிக்கப்பட்டுள்ளது.