நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நேற்று ஒரே நாளில் 19 பேர் வேட்புமனுத்தாக்கல்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்பதால், இன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்றும் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர், நகராட்சி வார்டு, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.