நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வாக்காளர் பட்டியல் வெளியானது..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பை ஜனவரி மாதத்தில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. https://tnsec.tn.nic.in என்ற தளத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை காணலாம்.