நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி நிலவரம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374: இதில், 1373 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திமுக 952 வார்டுகளை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, மதிமுக 21, விசிக 16, சிபிஐ 13, முஸ்லீம் லீக் 6, பாமக 5, அமமுக 3, எஸ்டிபிஐ 1 வெற்றி பெற்றுள்ளனர்.
138 நகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 3843: இதில், 3842 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, பாமக 48, சிபிஎம் 41, மதிமுக 34, அமமுக 33, விசிக 26, முஸ்லீம் லீக் 23, சிபிஐ 19, தேமுதிக 12, எஸ்டிபிஐ 5, பகுஜன் சமாஜ் 3, மமக 4, ஐஜேகே 2 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
489 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 7621: இதில் 7603 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 4,388 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206, காங்கிரஸ் 368, பாஜக 230, சிபிஎம் 101, பாமக 73, அமமுக 66, விசிக 51, மதிமுக 34, சிபிஐ 26, தேமுதிக 23, எஸ்டிபிஐ 16, மமக 13, முஸ்லீம் லீக் 12, நாம் தமிழர் 6, புதிய தமிழகம் 3, மார்க்சிஸ்ட் (மா.லெ) 1, ஐஜேகே 1, என்சிபி 1, பகுஜன் சமாஜ் 1, மஜக 1, தமமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.