நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இறுதி பட்டியல் இன்று வெளியீடு..!

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகள் வார்டு எண்ணிக்கை நிர்ணயம், எல்லை வரையறை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025