நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இபிஎஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தேதி வெளியானது ..!

Default Image

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்றுமாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  7.2.2022 முதல் 15.2.2022 வரை கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

go

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்