நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.
இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை (154 வேட்பாளர்கள்) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வெளியிட்டு வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை வெளியிட்டார்.
இதனிடையே, தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதான கட்சிகள் ஐடா ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் என தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/RAs8nZ3sbl
— Kamal Haasan (@ikamalhaasan) January 28, 2022