நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்.
தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.