நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – சென்னையில் திமுக கூட்டணி 164 வார்டுகளில் போட்டி?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் திமுக 164 வார்டுகளில் போட்டியிடும் என தகவல்.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்காக இடங்கள் ஒதுக்கீடு செய்து, வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 8வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக 164 வார்டுகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு 11 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இன்று சென்னை மாநகராட்சி தேர்தலில் 154 வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது.
காங்கிரஸ் 17, விசிக 6, மார்க்சிஸ்ட் 5 இடங்களில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.மதிமுக 3, சிபிஐ 2, ஐயுஎம்எல் மற்றும் மமகவுக்கு தலா 1 ஒதுக்கப்பட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக 35 வர்டுகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 28-ஆம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெறப்பட்டு வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…
December 26, 2024![Today Live 26122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-26122024.webp)
புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!
December 26, 2024![anirudh Sawadeeka](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/anirudh-Sawadeeka.webp)
சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!
December 26, 2024![virat kohli fight](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/virat-kohli-fight.webp)