‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’- பிப்.6-ஆம் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலியில் பரப்புரை..!
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக வரும் 6-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, இன்று மாலையுடன் நிறைவடைந்தது. மேலும், வேட்புமனு பரிசீலினை நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக வரும் 6-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.