நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பாஜக இன்று ஆலோசனை..!
சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், இன்று ஆலோசனை.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டமானது பாஜக தலைவர் ன்னமலை அவர்கள் தலைமையில் நடைபெறும் நிலையில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.