நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் அண்ணாமலை, பொன்ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…